உந்தன்......
பல்லவி
உந்தன் பதமே சதமென்று தினம் துதிக்கும்
எந்தனை ஆண்டு கொள்வதெப்போது ரகுராமா
அனுபல்லவி
அந்தணர் முனிவர்கள் செய்திடும் வேள்விக்கு
குந்தகம் விளைவிக்கும் அரக்கரை அழித்தவனே
சரணம்
சந்திரனுக்கொளி தரும் பகலவன் குலத்தோனே
இந்திரன் பிரமன் வணங்கிடும் உத்தமனே
நிந்தை புரிந்திடும் நீசருக்குமருள் தரும்
எந்தையே கேசவனே ஏழைப்பங்காளனே
No comments:
Post a Comment