உன்னைச்சரண்டைந்தேன்
பல்லவி
உன்னைச் சரணடைந்தேன் ஶ்ரீரகுராமா
என்னை ஆண்டருள வேண்டுமென வேண்டி
அனுபல்லவி
தன்னைத்துதித்திடும் அடியார்கள் நலம் பேணும்
இன்னமுதே கேசவனே தினகரகுலத்தோனே
சரணம்
அன்னை ஜானகியின் விருப்பம் நிறைவேற
பொன்மான் பின் சென்ற கோதண்டராமனே
இன்னலிடர் நீங்கி நன்னலம் பெறவும்
என்னை ஆட்டுவிக்கும் வினைபயன் தொலையவும்
No comments:
Post a Comment