நேரமேது ஶ்ரீராமா......
பல்லவி
நேரமேது ஶ்ரீராமா உனக்கு
ஆற அமர என்குறை கேட்டிட
அனுபல்லவி
பாரமெனக் கருதி கேசவனே நீயும்
ஓரமாயென்னை ஒதுக்கியது ஏனோ
சரணம்
நேரெதிர் நின்று பரதன் வெண்குடை ஏந்த
சீருடன் தம்பியர் இருவரும் கவரி வீச
மாருதியும் அருகினில் அரியணை தாங்கி நிற்க
பாரிலனைவரும் உனைப் போற்றும் போது
No comments:
Post a Comment