உனது திருவடியின்......
பல்லவி
உனது திருவடியின் அருகிலிருந்திட
எனக்கொரு வரம் வேண்டும் ஶ்ரீரகுராமா
அனுபல்லவி
அனந்தனைப்போலவும் அனுமனைப் போலவும்
அனவரதமும் உன் பணி செய்து என்றும்
சரணம்
சனகாதி முனிவரும் தேவரும் பிரமனும்
வினதையின் புதல்வனும் அடிபணிந்தேத்தும்
வனமாலை கௌத்துபமணிந்த கேசவனே
இனகுலதிலகனே கோசலராமனே
No comments:
Post a Comment