எத்தனை காலமிந்த.........
பல்லவி
எத்தனை காலமிந்த பூமியில் உழல்வது
உத்தமனே ஶ்ரீராமா விடுதலை எனக்கருள்வாய்
அனுபல்லவி
இத்தனை நாளுமுன் நாமமே துதித்து
சித்தத்தில் வைத்து சீரடி போற்றினேன்
சரணம்
சத்தியசீலனே திருமாலே கேசவனே
கத்தும் கடல் நடுவே பள்ளிகொண்டிருப்பவனே
பத்து தலையரக்கனை வீழ்த்திய ராகவனே
மெத்தனம் காட்டாமல் எந்தன் கலிதீர்ப்பாய்
No comments:
Post a Comment