உன்னையே........
பல்லவி
உன்னையே நம்பினேன் ஶ்ரீ ராமா நீயும்
என்னைக் கைவிடில் வேறெங்கு செல்வேன்
அனுபல்லவி
சொன்ன சொல் காப்பவனே சூரியகுலத்தோனே
தன்னிகரில்லாத தேவனே கேசவனே
சரணம்
இன்சொல் வேந்தனே அடியார்க்கருள்பவனே
பன்னக சயனனே பாற்கடல் வாசனே
உன்னடியாருடன் கூடி உனையே துதித்தேன்
மன்னுபுகழ் வடுவூர் கோதண்டராமனே
No comments:
Post a Comment