ஶ்ரீராம பக்தியெனும்......
பல்லவி
ஶ்ரீராம பக்தியென்னும் முத்துநிறை ஆழ்கடலுள்
ஏராளம் முத்திருக்க முத்தெடுக்க மூழ்கினேன்
அனுபல்லவி
சீராளன் தாள் வணங்கி அவனருளால் மட்டுமே
தாராளம் முத்துக்கள் பெறவியலுமென்றே
சரணம்
பாராளும் வேந்தரும் பாமரரும் பணிந்தேத்தும்
ஆராவமுதன் கேசவன் புகழ் பாடி
மாறாத பக்தியடன் நேரெதிரே நின்று
ஓராயிரம் நாமமோதித் துதித்து
No comments:
Post a Comment