தஞ்சமடைந்தேன்.......
பல்லவி
தஞ்சமடைந்தேன் ஶ்ரீராமா உனையே
அஞ்சலென்றபயம் அளித்தெனை ஆண்டருள்வாய்
அனுபல்லவி
வெஞ்சமரில் ராவணனை வென்றழித்த கேசவனே
நஞ்சுண்டகண்டன் ஈசன் சிவநேசனே
சரணம்
அஞ்சம்பு மாரனின் அழகினுமழகுடயவனே
அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயன்
நெஞ்சினில் வைத்துத் துதித்திடும் ராகவனே
சஞ்சலம் களைந்தென் மன இருள் நீங்கிட
No comments:
Post a Comment