அகிலம்.......
பல்லவி
அகிலம் முழுவதையும் படைத்து காத்தருளும்
முகில் வண்ணனே ராமா திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
புகலிடம் நீயன்றி வேறில்லை எனக்கு
ஜகம் புகழும் புண்ணியனே திருமாலே கேசவனே
சரணம்
அகலிகையின் சாபம்தனைத் தீர்த்த கருணாகரனே
துகிலிழந்த காரிகைக்கு அபயமளித்தவனே
இகபரமிரண்டிலும் சுகமளிப்பவனே
குகனையும் தோழனாய் ஏற்ற ராகவனே
சுகசனகாதியர் நரர்சுரர் நாரதர்
பகலவன் சந்திரன் எண்திசை பாலர்கள்
மகபதி பிரமன் மாருதி கருடன்
சகலரும் வணங்கிடும் தீனசரண்யனே
No comments:
Post a Comment