நல்லதும் தீயதும்.......
பல்லவி
நல்லதும் தீயதும் பிரித்தறிய இயலாது
அல்லலுரும் எனக்கு வழிகாட்டுவாய் ராமா
அனுபல்லவி
கல்லார்க்கும் கற்றவர்க்கும் அருளளிக்கும் கேசவனே
நல்லவர்க்கும் தீயவர்க்கும் நடுவில் இருப்பவனே
சரணம்
பொல்லாதவனாய் பொறுப்பின்றித் திரிந்தேன்
உல்லாச வாழ்வில் திளைத்துனை மறந்தேன்
அல்லல் பிறவியை அறுத்தெனைக் காத்தருள
வில்லாளனே உனை வேண்டித்துதித்தேன்
No comments:
Post a Comment