பாராமுகமேனய்யா........
பல்லவி
பாராமுகமேனய்யா ஶ்ரீ ராமா
ஆராவமுதே அருந்தேனே கேசவனே
அனுபல்லவி
நேராக நின்று உந்தன் சந்நிதியில்
மாறாத பக்தியுடன் தினம் துதிக்குமென் மீது
சரணம்
காரார் குழலி சீதை சொல் கேட்டோ
ஊரார் போற்றும் இளையவனுரைத்தானோ
மாருதியோ வேறு யாரென்ன சொன்னாரோ
பாரில் உனையன்றி வேறொரு துணையில்லை
No comments:
Post a Comment