உனக்கென்ன......
பல்லவி
உனக்கென்ன தயக்கம் ஶ்ரீராமா இன்னும்
எனக்கருள தாமதம் செய்வதும் ஏனோ
அனுபல்லவி
வனமாலை துளபமணிந்த கேசவனே
இனகுலதிலகனே கோதண்ட ராமனே
சரணம்
கனிகளைக் கடித்து கொடுத்த சபரிக்கும்
முனிவரின் மனைவிக்கும் அருளளித்தாயே
கனவிலும் நினைவிலும் உனையே நினந்து
மனமாரத் துதித்திடும் எளியோனுக்கிரங்கிட
No comments:
Post a Comment