பட்டதுயர்......
பல்லவி
பட்டதுயர் போதாதோ பழவினைகள் தீராதோ
பட்டாபி ராமனே பரிந்தருள் புரிந்திடுவாய்
அனுபல்லவி
சுட்டெரிக்கும் சூரிய குலத்துதித்த ராகவனே
வட்ட நிலா முகத்தோனே வடிவான கேசவனே
சரணம்
கட்டுக்கடங்காமல் எட்டு திக்கும் திரிந்து
கெட்டலையும் மனக்குரங்கை அடக்கிட வேண்டியுன்
எட்டெழுத்து நாமமே அனுதினம் துதித்து
மட்டவிழ் மலர் தூவிப் பாதம் பணிந்தேன்
No comments:
Post a Comment