உனதருளே போதும்......
பல்லவி
உனதருளே போதும் ஶ்ரீ ரகுராமா
எனது மனக்கவலை அனைத்தும் தொலைந்திட
அனுபல்லவி
அனவரதம் உன் நாமமே துதித்தேன்
இனகுலதிலகனே மாலனே கேசவனே
சரணம்
வினதையின் புதல்வனை வாகனமாய் க்கொண்ட
ஜனகனின் மருமகனே ஜானகி ராமனே
வனவிலங்கென மனம் தறிகெட்டலைவதை
தினவுடன் தடுத்து ஆண்டருள என்றும்
No comments:
Post a Comment