கமலபதம்தான்.....
பல்லவி
கமலபதம்தான் வலித்திடுமோ ராமா
எமையாள ஓடோடி நீயும் வந்தாலே
அனுபல்லவி
சமர் செய்து ராவணனை வென்ற கேசவனே
அமரருக்கு அமுதளித்த திருமாலே உந்தன்
சரணம்
சமமென ஒருவரும் இல்லாதவனே
அமரேந்திரன் பணியும் தேவாதி தேவனே
சமயமிதுவேயென மனமுருகித்துதித்து
உனதருள் வேண்டி அழைத்திடுமெனக்கெனில்
No comments:
Post a Comment