சரணம் சரணம்.......
பல்லவி
சரணம் சரணம் ஶ்ரீராமா சரணம்
அரவணைத்தெனையே ஆண்டருள வேண்டியுன்
அனுபல்லவி
மரவுரியணிந்து கானகம் சென்று
கரன் முரனரக்கரை வதம் செய்த கேசவனே
சரணம்
மரத்தின் பின் மறைந்திருந்து வாலியை வென்றவனே
பரசுபாணியின் கர்வம் தீர்த்தவனே
சிரமீரைந்தறுத்து ராவணனைக்கொன்றவனே
அரவக்கொடியோனிடம் தூதுவனாய்ச் சென்றவனே
அரனுடன் முனிவர்கள் சுகசனகாதியர்
கரம் பணிந்தேத்தும் கருணைக்கடலே
பரவாசுதேவனே பாற்கடல் வாசனே