ஆபத்தில் காத்து நிற்கும் குடையாய் நீ
காபந்து செய்து காத்தருள்வாய் கண்ணா
கோபர்கள் குலம் காக்க பண்டொருநாள்
குன்றுதனைக் குடையாகப் பிடித்தவனே
சாபங்கள் தந்திடும் முனிவர்களும்
ஆபால பூபாலரனைவருமே உனக்கு
சோபனம் பாடிக்கொண்டாடும்
பெருமைக்குரிய கருநீலவண்ணனே
ஆபத்தில் காத்து நிற்கும் குடையாய் நீ
காபந்து செய்து காத்தருள்வாய் கண்ணா
No comments:
Post a Comment