ஆதிகேசவா
பல்லவி
எனைக்காக்க உனையன்றி வேறு யாருள்ளார்
அனைத்தும் நீயே ஆதிகேசவா
அனுபல்லவி
சுனை நீராய்க் கருணை சுரந்திடும் தெய்வமே
பனை போல் பயனளிக்கும் தேவாதி தேவனே
சரணம்
வனவிலங்கெனவே புலன்களனைத்தும்
அலைக்கழித்திடுமென் நிலைதனை திருத்தி
வினைப்பயனால் நான் படுந்துயர் களைந்திட
தினமுமுனைத் துதித்தேன் தீனசரண்யனே
No comments:
Post a Comment