திருவாடானை ஆதிரத்தினேச்வரன்
பல்லவி
நாற்றிசையும் புகழ் விளங்கும் ஆதிரெத்தினேச்வரனை
போற்றித்துதித்தேன் பவபயம் களைந்தேன்
அனுபல்லவி
காற்று நிலம் நீர் நீள்விசும்புமாகி
ஏற்றமுடன் ஆடானைத் திருத்தலத்தில் வீற்றிருக்கும்
சரணம்
நேற்று இன்று நாளையும் நீயே
கூற்றனே உன்னருளொன்றே போதும்
மாற்றெதுவும் வேண்டேன் கேசவன் நேசனே
சாற்றிய திருநீற்றின் பொலிவுடன் திகழும்
No comments:
Post a Comment