திருவுள்ளமிரங்காதா
பல்லவி
திருவுள்ளமிரங்காதா கோவிந்தா
உருகித்துதித்திடும் உனதடிமையெனைக்காக்க
அனுபல்லவி
அருகினில் நீயிருந்தும் அறியாமல் நானிருந்தேன்
கருணைக் கடலே ஒருமுறை காட்சிதர
சரணம்
பெருமைமிகு திருமலையில் கோயில்கொண்டிருப்பவனே
அருமறைகள் போற்றும் திருவேங்கடமுடையானே
திருவடி தரிசனம் தந்தாலும் போதும்
பெருமிதம் கொள்வேன் ஆனந்தமடைவேன்
No comments:
Post a Comment