திருவடி சரணம்
பல்லவி
திருவடி சரணடைந்தேன் கோவிந்தா
கருணைக் கடலே உனதருள் வேண்டியே
அனுபல்லவி
இருவினைப்பயன்கள் இருளெனச்சூழ
கருநிறக்கேசவனே ஒளிதருவாயென
சரணம்
அரும்பெரும் பதவிகள் போகம் வேண்டாம்
பெரும் புகழ் செல்வம் எதுவும் வேண்டாம்
ஒருமுறை உந்தன் எதிரில் நின்று
தரிசனம் செய்திடும் பாக்யமே போதும்
No comments:
Post a Comment