மயூரவல்லி
பல்லவி
பொன்மழை பொழிந்திடும் திருமகளைத் துதித்தேன்
கன்ம வினைகளைந்து இன்னருள் தந்து
அனுபல்லவி
கன்றின் குரல் கேட்டு மடிசுரந்த பசுவைப்போல்
அன்புடன் சங்கரர் வேண்டிய வண்ணம்
சரணம்
பன்னகசயனன் கேசவன் திருமார்பில்
மின்னும் சோபையுடன் வீற்றிருப்பவளை
நன்னெறி தழைக்கும் திருமயிலை திருத்தலத்தில்
இன்பமுறக் காட்சி தரும் மயூரவல்லியை
No comments:
Post a Comment