அம்புஜவல்லி
பல்லவி
அம்புஜவல்லியுன் அரவிந்த பதம்தனை
நம்பித்துதித்தேன் நலம் தருவாயென
துரிதம்
உம்பர்கள் முனிவர்கள் நாரதர் நான்முகன்
அம்பிகை கலைமகள் அனைவரும் போற்றும்
அனுபல்லவி
அம்புஜநாபன் கேசவன் மணிமார்பில்
அழகுடன் வீற்றிருக்கும் கடலரசன் மகளே
சரணம்
பம்பரமாக சுழலுமிவ்வுலகின்
சாட்டையைக் கையிலேந்தி ஆட்டுவிக்கும்
பாம்பணைமேல் பள்ளிகொண்ட நாராயணனின்
அன்பு மனங்கவர் அலைமகளே திருமகளே
No comments:
Post a Comment