ஶ்ரீராமநாதன்
பல்லவி
ஶ்ரீராமநாதனை வந்தனை புரிந்தேன்
பேராயிரம் கொண்ட கேசவன் நேசனை
அனுபல்லவி
நூறாயிரம் கோடி முனிவரும் தேவரும்
ஶ்ரீராமனுடன் சீதை அனுமனும் வணங்கிடும்
சரணம்
தீராவினை தீர்க்கும் தேவாதி தேவனை
மாரனை எரித்தவனைக் காலனைக்காய்ந்தவனை
ஈராறு கரத்தோனை குருவாகக்கொண்டவனை
பாரோர் புகழ்ந்தேத்தும் ராமேஸ்வரம் தலத்தில்
No comments:
Post a Comment