அயோத்தி ராமன் ( ராமஜென்மபூமி)
பல்லவி
அயோத்தி ராமனை மனமாரப் பணிந்தேன்
சரயூ நதிக்கரை தனில் நின்று காட்சிதரும்
அனுபல்லவி
சுயம்வரம் தனிலே வில்வளைத்தொடித்து
ஜானகி தேவியின் மலர்க்கரம் பற்றிய
சரணம்
மாதவம் புரிந்திடும் முனிவர்களும் மற்றும்
சீதாதேவியும் இளையவன் இலக்குவனும்
ஆஞ்சநேயனும் கரம்பணிந்தேத்தும்
ஆதவகுலத்துதித்த நாயகன் கேசவன் ( அயோத்தி...)
நூதனமான பேதங்களால் வந்த
வேதனைகள் தீர வேண்டுமென்று
சோதனைகள் பல கடந்து வந்து
மாதவனவனை வேண்டியே துதித்து ( அயோத்தி....)
No comments:
Post a Comment