வரலக்ஷ்மி வருக வருக
பல்லவி
வருக வருக வரலக்ஷ்மி வருக
தருக தருக நலமனைத்தும் தருக
துரிதம்
நரர் சுரரிந்திரன் நாரதர் நான்முகன்
கரம் பணிந்தேத்தும் மறைபொருள்நீயே
அனுபல்லவி
திருமகளுனையே அனுதினம் துதித்தேன்
பெருமைக்குரிய கேசவன் நாயகியே
சரணம்
பருகிடப் பாயசமும் அன்னமும் இன்னும்
பழங்களும் தேனும் பாக்கும் வெற்றிலையும்
பெருகிடும் அன்புடன் அனைத்தும் படைத்தேன்
அருளளித்தெனையே ஆண்டருள்வாயே
ஆவணி திங்கள் வெள்ளிக்கிழமை
ஆவலுடன் உனை வரவேற்கின்றேன்
பூவிலமர் அலைமகளே என்மனக்
கோவிலிலமர்நதிட வரம் தருவாயே
No comments:
Post a Comment