வாமன கணபதி
பல்லவி
வாமன வடிவில் காட்சி தரும் கணபதியை
தூமலர் தூவி மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
காமனை விடவும் பேரழகுடையவனை
ஆமருவியப்பன் கேசவன் மருகனை
சரணம்
சாமமுதல் வேதங்கள் சாத்திரங்கள் போற்றும்
ஓமெனும் மந்திரப் பொருளானவனை
தாமரைப் பாதனை ஆனைமுகத்தோனை
காமக்ரோதாதி அறுபகை நீங்கிட
No comments:
Post a Comment