கதறியழைத்தேனே
பல்லவி
கதறியழைத்தேனே காதில் விழவில்லையா
உதறிடத்தவறென்ன செய்தேன் கேசவா
அனுபல்லவி
உதவியென்றழைத்த கரிக்கும் காரிகைக்கும்
இதமுடன் மனமிரங்கி அபயமளித்தவனே
சரணம்
மதுர மொழி பேசும் மாயனே மாதவா
யதுகுல திலகா யாதவ குலதீபா
கதிநீயே அகதியெனை பிழைபொறுத்தாண்டருள
இதுவே தருணம் சரணம் சரணம்
No comments:
Post a Comment