காமாட்சி
பல்லவி
மங்களம் தந்திடும் சங்கரியைத் துதித்தேன்
பொங்கும் மூவாசைப் பிணிதனைக் களைந்திட
அனுபல்லவி
சங்கரன் பங்கிலுறை அங்கயற்கண்ணி
எங்கும் நிறைந்திருக்கும் கேசவன் சோதரி
சரணம்
திங்கள் பிறையணிந்த உமாமகேச்வரி
சிங்கவாகனம்தனிலமரீச்வரி
சங்கப்புலவர்களின் கவித்திறனை சோதிக்கும்
அங்க சௌந்தர்யம் உடைய காமாட்சி
No comments:
Post a Comment