துணைபுரிந்தருள்
பல்லவி
துணை புரிந்தருள்வாய் கேசவா
இணையடி நிழலே சதமெனத் துதித்தேன்
அனுபல்லவி
கணமுமுன் நாமமே உளமார நினைந்து
வணங்கினேன் உனதிரு கமலமலர்ப்பதம்
சரணம்
தணலேந்தும் நெற்றிக்கண்ணனும் பிரமனும்
சனகாதி முனிவரும் அமரருமிந்திரனும்
நாரதரும் திருமகளும் எண்திசை பாலரும்
பணிந்திடும் பாதனே பாற்கடல் வாசனே
No comments:
Post a Comment