புள்ளிமயில் வாகனன்
பல்லவி
வள்ளி தெய்வானை மணவாளா
புள்ளிமயில் வாகனா காத்தருள்வாய்
அனுபல்லவி
உள்ளன்புடன் துதிக்கும் அடியவர்க்கெல்லாம்
வெள்ளமெனக் கருணையளித்திடும் கந்தனே
சரணம்
தெள்ளுதமிழ் வளர்த்த சங்கம்தனை வளர்த்த
தெள்ளியனே குகனே கேசவன் மருகனே
முள்ளாயுறுத்தும் பவவினை களைந்தெனை
அள்ளியணைத்து ஆண்டருள வேண்டினேன்
No comments:
Post a Comment