கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
பல்லவி
கோவிந்தா கோவிந்தா கோவிந்தாவென்று
நாவந்த கோவிந்தன் நாமமுரைக்கட்டும்
அனுபல்லவி
கோவிந்தா கோவிந்தா கோவிந்தாவென்று
செவியந்த கோவிந்தன் நாமமே கேட்கட்டும்
சரணம்
கோவிந்தா கோவிந்தா கோவிந்தாவென்று
மனமந்த கோவிந்தன் நாமமே துதிக்கட்டும்
கோவிந்தா கோவிந்தா கோவிந்தாவென்று
விழியந்த கோவிந்தன் வடிவழகைப் பருகட்டும்
கோவிந்தா கோவிந்தா கோவிந்தாவென்று
கூப்பிய கரமிரண்டும் பாதம் பணியட்டும்
கோவிந்தா கோவிந்தா கோவிந்தாவென்று
உடலந்த கோவிந்தன் திருவடியை வணங்கட்டும்
No comments:
Post a Comment