ஶ்ரீ நிவாசன்
பல்லவி
திருமகளைத் திருமார்பில் தாங்குகின்ற திருமாலின்
திருவடிக் கமலங்களை அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
அருமறைகள் சாஸ்த்ரபுராணங்கள் போற்றும்
பெருமைக்குரிய ஆதிகேசவனின்
சரணம்
வருமிடர் துயர்களை பழவினைப் பயன்களை
எரிமுன்னர் வைத்தூறு போலழிக்கும் மாதவனின்
திருமலையில் எழுந்தருளி பக்தருக்கு காட்சி தரும்
திருவேங்கடமுடையானின் தீனசரண்யனின்
No comments:
Post a Comment