சமயம் இதுவே
பல்லவி
சமயம் இதுவே கேசவா
நமஸ்கரித்திடும் என்னை ஆண்டருள
அனுபல்லவி
அமரரும் முனிவரும் இந்திரனும் பிரமனும்
நமச்சிவாயனும் பணிந்திடும் மலனே
சரணம்
கமலமலரமர் திருமகள் மார்பனே
கமலநாபனே மதுசூதனனே
நமனாய்க் கம்சனைக் காய்ந்த கண்ணனே
சமம் தனக்கொருவரும் இல்லாத தேவனே