மீயச்சூர் ஶ்ரீ லலிதாம்பிகை
பல்லவி
பார்வதி பரமேச்வரி ஶ்ரீலலிதே
கீர்த்தி மிகு மீயச்சூர் திருத்தலத்துறையும்
அனுபல்லவி
கார்முகில் வண்ணன் கேசவன் சோதரி
பார் புகழ் ஶ்ரீமகா திரிபுரசுந்தரி
சரணம்
ஏற்புடை ஈசனிடங்கொண்ட நாயகி
நாற்கவிகள் போற்றும் உமாமகேச்வரி
காற்சிலம்பணிந்த கௌரி மனோகரி
கடைக்கண் வைத்தெனை காத்தருள்வாயே
No comments:
Post a Comment