ஆடிய பாதம்
பல்லவி
ஆடிய பாதத்தை நாடித் துதித்தேன்
அனுபல்லவி
ஈடிணையில்லாத தில்லைநாதனின்
சரணம்
சூடிய பிறையும் புனலும் சடையும்
தோடுடன் குண்டலம் கொன்றையும் மாலையும்
கழுத்தில் அணிந்த முத்தும் ஆரமும்
அரவும் ஆடப் பொன்னம்பலம்தனில்
காலினில் சிலம்பும் சலங்கையுமாட
கைகளிலேந்திய மான் மழுவாட
மாடுடன் கேசவன் பிரமனுமாட
கணபதி முருகன் கணங்களுமாட
தில்லை மூவாயிரம் வேதியருடனே
பாடித்துதித்திடும் அடியாருமாட
பதஞ்சலி வியாக்ரபாதருமாட
சிவகாமி அன்னையும் சேர்ந்துடனாட
No comments:
Post a Comment