வெற்றிவேல் முருகன்
பல்லவி
வெற்றி வேல் முருகன் மலர்த்தாள் தனையே
பற்றித் துதித்தேன் பிறப்பிறப்பறுத்திட
அனுபல்லவி
முற்றும் துறந்த முனிவரும் ஞானியரும்
கற்றிடும் அடியாரும் அனைவரும் பணிந்திடும்
சரணம்
புற்றுரை ஈசனுக்கோதிய குமரன்
ஒற்றைக்கொம்பனின் அன்பு சோதரன்
எற்றைக்குமேழேழ் பிறவிக்குமெந்தன்
உற்ற துணை அந்தக் கேசவன் மருகனென்று
No comments:
Post a Comment