கலியுகக்கண்ணன்
பல்லவி
கண்ணனே நான் வணங்கும் கலியுகக்கடவுள்
மண்ணுண்ட வாயன் மாதவன் கேசவன்
அனுபல்லவி
எண்ணமெல்லாம் அவனை முழுதும் நினைந்து
பண்ணிசைத்துப் பாடி பரவசித்து துதித்து
சரணம்
தண்மதி முகத்தினன் தாமரை பதத்தினன்
மண்மகள் திருமகள் இருவரும் விரும்பும்
கண்கவரெழில் கொஞ்சும் கார்மேகவண்ணன்
புண்ணியம் செய்ததோர்க்கு கண்ணெதிரில் காட்சி தரும்
No comments:
Post a Comment