வாதாபி கணபதி
பல்லவி
வெற்றி தரும் வாதாபி கணபதியின் திருவடியை
பற்றித்துதித்தேன் திருவாரூர் திருத்தலத்தில்
அனுபல்லவி
கற்றறிந்தவரின் புத்தியிலுறைபவன்
சக்கரக்கையன் கேசவன் மருகன்
சரணம்
பற்றித்துதிப்பவர் துயர்களைக் களைபவன்
ஒற்றைக்கொம்பன் வேழமுகத்தோன்
நற்றமிழ்க் கடவுள் ஞானசூரியன்
புற்றிடம் கொண்ட தியாகேசன் மைந்தன்
No comments:
Post a Comment