திருமலைக்கோடி நாராயணி*
பல்லவி
ஒருமுறை அருட்பார்வையளித்தாலும்போதும்
கருணைக் கடலே ஶ்ரீ லக்ஷ்மிநாராயணி
அனுபல்லவி
கருவறையில் திருவுருவம் கண்டு மகிழ்ந்தேன்
திருமலைக்கோடியில் வீற்றிருக்கும் தேவி
சரணம்
பொருள் புகழ் போகம் எதுவும் வேண்டேன்
இருள் நீக்கி என் மனம் ஒளிபெறச் செய்திடுவாய்
திருமகள் கலைமகள் மலைமகள் நீயே
திருவடி வணங்கிடும் கேசவன் எந்தனுக்கு
*Vellore Golden temple
No comments:
Post a Comment