மீயச்சூர் கொலுசணிந்த சுந்தரி
பல்லவி
என்குறை களைந்தெனையாண்டருள்வாயே
என் தாயே ஶ்ரீலலிதாம்பிகையே
அனுபல்லவி
அன்னபூரணி கேசவன் சோதரி
பன்னகாபரணன் மனங்கவரீச்வரி
சரணம்
நின்னருளில்லையேல் என்னுயிர் நிலைக்குமோ
அன்னையுன் கருணைக்கு எல்லையே இல்லையே
தன்னிகரில்லாத தனிப்பெருந்தேவி
மன்னுபுகழ் மீயச்சூர் கொலுசணிந்த சுந்தரி
No comments:
Post a Comment