தாமரை மலர்ப் பாதன்
பல்லவி
தாமரை மலர்ப் பாதனே கேசவா
மாமறை போற்றுமுன் திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
நாமகள் நாதனும் நாரதரும் முனிவர்களும்
பூமண்டலத்தோரனைவரும் துதித்திடும்
சரணம்
தேமதுரத்தமிழால் பாமாலை இசைத்து
நாமமாயிரம் ஓதித்துதித்தேன்
தூமலர் தூவி அருச்சனை புரிந்தேன்
பூமியிலினிப் பிறவா வரமருள்வாயே
No comments:
Post a Comment