மங்களாம்பிகை
பல்லவி
சங்கராபரணமே* மங்களாம்பிகே உன்
பங்கய மலர்ப்பதம் நாளும் துதித்தேன்
அனுபல்லவி
கங்கையும் திங்களும் சடையிலேந்திடும்
அகச்தீச்வரரின் இடம் கொண்ட நாயகி
சரணம்
பொங்கும் மூவாசைப்பிணிதனையே களைந்து
மங்களம் நல்கிடும் ஶ்ரீ லலிதாம்பிகே
தெங்கும் வயலும் சூழ் வையச்சேரியில்
எங்கும் நிறைந்திருக்கும் கேசவன் சோதரி
( *சங்கரன்+ஆபரணம்)
No comments:
Post a Comment