பர்வதவர்த்தினி
பல்லவி
பர்வதவர்த்தினி பதமலர் பணிந்தேன்
சர்வமும் நீயென தஞ்சமடைந்தேன்
துரிதம்
சனீச்வரனுடன் கணபதி முருகன்
அனைவரும் அனுதினம் வணங்கித் துதித்திடும்
அனுபல்லவி
சர்ப்பக்குடையணிந்து பக்தரைக்காத்திடும்
சர்வமங்களே ஶ்ரீராஜேச்வரி
சரணம்
தர்மம் தழைத்திட அவனியிலவதரித்த
கற்பகத்தருவே கேசவன் சோதரி
கர்மவினைப்பயனால் கட்டுண்ட என்னை
வர்மம் வைத்திடாமல் காத்தருள்வாயே (பர்வத........)
No comments:
Post a Comment