அம்பிகை
பல்லவி
அம்பிகையே உந்தன் அரவிந்த பதம் பணிந்தேன்
நம்பித்துதித்திடும் எனக்கருள்வாய் ஶ்ரீலலிதா
அனுபல்லவி
தும்பிமுகப்பெருமான் கணபதியுடனே
சம்புவும் முருகனும் அருகிருந்து போற்றும்
சரணம்
உம்பர் முனிவர் தொழும் திரிபுரசுந்தரி
சும்ப நிசும்பரை அழித்த பராசக்தி
வெம்பவக்கடலினைக் கடந்திட வரமருள்வாய்
அம்புய பதத்தினளே கேசவன் சோதரி
No comments:
Post a Comment