திருக்கள்வன்
பல்லவி
கள்வனூர்க் கள்வனை கேசவனைப் பணிந்தேன்
புள்ளரையன் மீதேறி ஞாலம் வலம் வரும்
அனுபல்லவி
வெள்ளமெனக் கருணைமழை பொழிந்திடுமச்சுதனை
உள்ளன்புடன் துதிக்குமடியார்க்கருள்பவனை
சரணம்
துள்ளித்திரியுமாவினங்கள் மேய்ப்பவனை
வெள்ளை விளிச்சங்கமேந்தும் மாதவனை
கள்ளச்சகடம் உதைத்தழித்த உத்தமனை
உள்ளம் புகுந்தென்னை ஆட்டுவிக்கும் மாயவனை
No comments:
Post a Comment