வழக்கறுத்தீச்வரன்
பல்லவி
வழக்கறுத்தீச்வரரின் பதமலர் பணிந்தேன்
விழிதனிலழலேந்தும் நெற்றிக்கண்ணன்
துரிதம்
நந்தியும் கணங்களும் தேவரும் பிரமனும்
இந்திரன் மற்றும் முனிவரும் துதித்திடும்
அனுபல்லவி
மழைமுகில் வண்ணன் கேசவன்நேசன்
கழலடி பணிவோர்க்கருள் தருமீசன்
சரணம்
பழகு தமிழ் மொழியிலவன் புகழ் பாடிட
வழுவாதவன் நாமம் நெஞ்சில் நிலைத்திட
அழுக்காறவா வெகுளி இன்னாச்சொல் மற்றும்
பழவினைப்பயன்களனைத்தும் தொலைந்திட
No comments:
Post a Comment