பாதகமலமே கதி
பல்லவி
பாதகமலமே கதியென்று பணிந்தேன்
ஆதரித்தனையே ஆண்டருள்வாய் கேசவா
அனுபல்லவி
வேத புராண சாத்திரங்கள் போற்றும்
மாதவா முகுந்தா மதுசூதனா உந்தன்
சரணம்
யாதவ குலத்துதித்து மாடுகள் மேய்த்து
பாதகம் செய்த அரக்கரை அழித்து
சாது ஜனங்களை கனிவுடன் காத்த
ஶ்ரீதரனே முரளி மோகனக் கண்ணனே
No comments:
Post a Comment