குருவாயுரப்பா
பல்லவி
கணநேரமெங்கிலும் உனைக்காணும் பாக்கியம்
எனக்கருள்வாயே குருவாயுரப்பா
அனுபல்லவி
தணலேந்தும் நெற்றிக்கண்ணன் சிவனும்
வணங்கிடும் தேவாதிதேவனே கேசவா
சரணம்
பணம் புகழ் பதவி எதுவும் வேண்டிலேன்
குணம் தரும் உன்னருளொன்றே வேண்டினேன்
துணையுன் திருவடித் தாமரை என்றே
மணம் தரும் மலர்கள் தூவித் தொழுதேன்
No comments:
Post a Comment