கண் கோடி வேண்டும் !
***
குடமேந்தி நடந்து வரும்
அழகுடைய கோபியரும்
பழகும் மாடுகளும்
உடனிருக்கும் கன்றுகளும்
இடையரும் இடைச்சியும்
மழை மேகம் நிறை வானும்
பறக்கும் பறவைகளின் இசையோசையும்
சலசலக்கும் மரம் செடி கொடிகளும்
சூழ்ந்திருக்கும் வனத்திடையே
மயிலிறகும் வனமாலையும் சூடி
குழலும் கையிலேந்தி வரும்
கண்ணா உனைக்காணக் கண்
ஒரு கோடி வேண்டாமோ !!!!
No comments:
Post a Comment